TNPSC Thervupettagam

அண்டார்டிக் கண்டத்திட்டு சுற்றுச்சூழல் அமைப்புகள்

January 21 , 2024 180 days 262 0
  • அதிக அளவு பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தினால் அண்டார்டிக் கண்டத்தின் கடல் சார்ந்த பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் (MPA) கண்டத்திட்டுகளின் அமிலத்தன்மை அளவுகள் அதிகரித்து வருகின்றன.
  • மனித நடவடிக்கைகளில் இருந்து வெளியேறும் கார்பன் உமிழ்வுகள் கடலோரப் பகுதிகளில் உள்ள கடல் நீரில் செங்குத்து மட்டத்தில் கலப்பதன் விளைவாக அனைத்து நீர் மட்டங்களிலும் கடுமையான அமிலத்தன்மை ஏற்படுகிறது.
  • இந்த ஆய்விற்கு அண்டார்டிக் கடல்சார் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் பதிவான கடுமையான 21 ஆம் நூற்றாண்டின் கடல் அமிலமயமாதல் என்று பெயரிடப் பட்டு உள்ளது.
  • வளிமண்டலத்தில் வெளியிடப்படும் கார்பன் டை ஆக்சைடு வாயுவை (CO2) உட் கிரகிப்பதன் மூலம் புவி வெப்பமடைதலின் விளைவுகளைத் தணிக்க பெருங் கடல்கள் உதவுகின்றன.
  • 2100 ஆம் ஆண்டில், கடலின் 200மீட்டர் ஆழத்திற்கு pH அளவு 0.36 (மொத்த அளவில்) வரை குறையலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்