அண்டார்டிக் பகுதியில் முதலாவது பறவைக் காய்ச்சல் பாதிப்பு
October 31 , 2023
392 days
342
- அண்டார்டிக் பகுதியில் முதன்முறையாக பறவைக் காய்ச்சல் பாதிப்பு இருப்பதை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
- இது தொலைதூரப் பகுதிகளில் காணப்படும் பெங்குவின் மற்றும் நீர் நாய்களின் எண்ணிக்கையின் மீது தாக்கத்தினை ஏற்படுத்தும் என்ற கவலையை எழுப்புகிறது.
- HPIA வைரஸ் நோய் அல்லது பறவைக் காய்ச்சல், குறிப்பாக H5 மற்றும் H7 திரிபுகள், பெரும்பாலும் பறவைகளை பாதிக்கிறது.
- இந்த திரிபுகள் தொற்று மிக்க நோய்க் கிருமிகள் மற்றும் வளர்ப்புக் கோழிகளில் இவற்றின் பாதிப்பு பதிவாகியுள்ளன.
- அவை காட்டுப் பறவைகளில் பாதிப்பினை ஏற்படுத்தினால் அதிக எண்ணிக்கையில் பறவைகள் உயிரிழப்பு ஏற்படும்.
- HPAI H5N1 வைரசின் தற்போதையப் பாதிப்பு ஆனது முதன்முதலில் 2022 ஆம் ஆண்டில் பதிவானது.
- 2022 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில், HPAI H5N1 என்ற வைரஸ் தென் அமெரிக்காவில் வேகமாகப் பரவியது.
Post Views:
342