மறைந்த பிரபல பத்திரிக்கையாளர் மற்றும் சமூக ஆர்வலரான திருமதி.கௌரி லங்கேஷ் அவர்களுக்கு ரா இன் வார் (RAW in WAR – Reach All Women in War) எனும் லண்டனைச் சேர்ந்த அரசு சாரா நிறுவனத்தால் வழங்கப்படும் அண்ணா போலிட்கோவ்ஸ்கயா விருது வழங்கப்பட்டுள்ளது.
திருமதி. கௌரி லங்கேஷ் இவ்விருதினை பெறும் முதல் இந்திய பத்திரிக்கையாளர் ஆவார்.
அண்ணாபோலிட்கோவ்ஸ்கயா
அண்ணா போலிட்கோவ்ஸ்கயா ஓர் புகழ்பெற்ற ரஷ்ய பத்திரிக்கையாளர் மற்றும் மனித உரிமைகள் ஆர்வலர் ஆவார்.
1995லிருந்து 2005 வரை நடைபெற்ற இரண்டாம் சென்சேன் போரின் போது செசென்யாவில் நடைபெற்ற மனித உரிமைகள் மீறலையும், ஊழலையும் வெளிகாட்டியதால் இவர் உலகப்புகழ் பெற்றார்.
அண்ணா போலிட்கோவ்ஸ்கயா 2006ல் படுகொலை செய்யப்பட்டார். அவருடைய படுகொலையின் நினைவு தினத்தை குறிக்கும் வகையில் ஆண்டுதோறும் ரா இன் வார் அமைப்பு இந்த விருதினை வழங்கி வருகிறது.