TNPSC Thervupettagam

அதிகத் துணைக் கோள்களை கொண்டுள்ள கிரகம்

February 19 , 2023 519 days 260 0
  • வியாழன் கோளானது, அதைச் சுற்றி 12 புதிய துணைக் கோள்கள் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டதனையடுத்து, அதிகத் துணைக்கோள்களைக் கொண்ட ஒரு கிரகமாக மாறியது.
  • மொத்தத்தில் 92 துணைக் கோள்களை கொண்ட இந்தக் கிரகம் சனிக்கோள் கொண்டு இருக்கும் துணைக் கோள்களின் எண்ணிக்கையினை மிஞ்சியுள்ளது.
  • சனிக் கோளானது, 83 உறுதிப்படுத்தப் பட்ட துணைக் கோள்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
  • அவை 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டில் ஹவாய் மற்றும் சிலி ஆகிய இடங்களில் உள்ள தொலைநோக்கிகளைப் பயன்படுத்தி கண்டுபிடிக்கப்பட்டதோடு, அவற்றின் சுற்றுப் பாதைகள் ஆனது அதற்குப் பிந்தைய ஆய்வுகளின் அடிப்படையிலும் உறுதிப் படுத்தப் பட்டது.
  • வியாழன் மற்றும் சனி ஆகிய கோள்களின் துணைக் கோள்கள் சிறிய உருவ அளவு கொண்டவையாகும்.
  • யுரேனஸ் 27 துணைக் கோள்களையும், நெப்டியூன் 14 துணைக் கோள்களையும், செவ்வாய் இரண்டு மற்றும் பூமி ஒரு துணைக் கோளினையும் கொண்டுள்ளன.
  • வெள்ளி மற்றும் புதன் ஆகிய கோள்களுக்குத் துணைக் கோள்கள் இல்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்