அதிகபட்ச பாலினம் சார்ந்த நிதிநிலை அறிக்கை ஒதுக்கீடு – 2024
February 9 , 2024 294 days 344 0
மத்திய நிதிநிலை அறிக்கையின் ஒரு தனி அறிக்கையானது, பெண்கள் மற்றும் சிறுமிகளை இலக்காகக் கொண்ட நிதி ஒதுக்கீடுகள் மற்றும் செலவினங்களின் மீதான மதிப்பீட்டை வழங்குகிறது.
மத்திய நிதிநிலை அறிக்கையின் ஒரு பகுதியாக வருடாந்திரப் பாலினம் சார்ந்த நிதிநிலை அறிக்கையை (GBS) வெளியிடும் நடைமுறை 2005-06 ஆம் ஆண்டில் தொடங்கியது.
பல்வேறு அமைச்சகங்களில் அமைக்கப்படும் பாலினம் சார்ந்த நிதிநிலை அறிக்கை தயாரிப்புப் பிரிவுகள் பற்றிய சாசனம் ஆனது 2007 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.
இந்த ஆண்டு, பாலினம் சார்ந்த நிதிநிலை அறிக்கையின் கீழ் வழங்கப்பட்ட மொத்த ஒதுக்கீடு 3 லட்சம் கோடி ரூபாயாக உள்ள நிலையில், இது மொத்தச் செலவினங்களில் சுமார் 6.5% ஆகும்.
இது முந்தைய ஆண்டிற்கான பாலினம் சார்ந்த நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப் பட்டதை விட சுமார் 40% அதிகம் என்பதோடு கடந்த பத்தாண்டுகளில் இல்லாத மிக அதிகமான உயர்வும் ஆகும்.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டின் பாலினம் சார்ந்த நிதிநிலை அறிக்கையின் கீழான ஒதுக்கீட்டின் 87% அதிகரிப்பானது 7 அமைச்சகங்கள்/துறைகள், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான தனது ஒதுக்கீடுகளை நன்கு அதிகரித்ததன் காரணமாகப் பதிவாகியுள்ளது.
மொத்தப் பாலினம் சார்ந்த நிதிநிலை அறிக்கையின் கீழான ஒதுக்கீட்டில் சுமார் 35%, அதாவது 1 லட்சம் கோடி ரூபாய் ஆனது, MGNREGA திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது பெரிய ஒதுக்கீடு ஆனது சுமார் 40,000 கோடி ரூபாய் அல்லது பாலினம் சார்ந்த நிதிநிலை அறிக்கையின் ஒதுக்கீட்டில் 13% ஆனது கல்வி அமைச்சகத்தினால் ஒதுக்கப்பட்டுள்ளது.
குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகத்தின் ஜல் ஜீவன் திட்டத்திற்கு 36,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் திட்டங்களுக்குச் சுமார் 35,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
பாலினம் சார்ந்த நிதிநிலை அறிக்கையின் கீழான ஒதுக்கீட்டில் இவை இரண்டிற்கும் தலா 11%-12% பங்கு ஒதுக்கப் பட்டுள்ளது.
பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா (நகர்ப்புறம்) திட்டத்திற்கான சுமார் 26,000 கோடி ரூபாய் ஒதுக்கீடானது பாலினம் சார்ந்த நிதிநிலை அறிக்கையின் கீழான ஒதுக்கீட்டில் 8.5% பங்காகும்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகமானது பாலினம் சார்ந்த நிதிநிலை அறிக்கையின் கீழான ஒதுக்கீட்டில் 6.6% பங்கினைப் பெறுகிறது.