TNPSC Thervupettagam

அதிகமான வறண்ட மாவட்டங்கள் – ஹரியானா

October 24 , 2019 1734 days 595 0
  • ஹரியானாவில் அதிகமான வறண்ட மாவட்டங்கள் இருக்கின்றன. இங்கு மொத்தமுள்ள 21 மாவட்டங்களில் 19 மாவட்டங்கள் வறண்ட மாவட்டங்களாக உள்ளன.
  • ஹரியானாவில் ஒட்டுமொத்தமாகப் பருவமழைப் பற்றாக்குறையானது 42% ஆக இருந்தது. மணிப்பூர் (-56%) மாநிலத்திற்குப் பிறகு இப்பருவமழை காலத்தில் நாட்டின் மிக வறண்ட மாநிலமாக ஹரியானா மாநிலம் மாறியுள்ளது.
  • இந்திய வானிலை ஆய்வு மையமானது (India Meteorological Department - IMD) ஒரு மாவட்டத்தில் “பற்றாக்குறையான” மழைப்பொழிவு என்பதை இயல்பான மழைப் பொழிவை விட 20% முதல் 59% வரையிலான குறைவான மழைப்பொழிவு என்று வரையறுக்கின்றது.
  • 60% அல்லது அதற்கு மேற்பட்ட பற்றாக்குறையான மழைப்பொழிவானது “மிகக் குறைந்த” அல்லது “மிகப்பெரிய அளவிலான பற்றாக்குறை” என்ற பிரிவில் வருகின்றது.
  • இந்தியா கடந்த 25 ஆண்டுகளில் இம்முறை மிக அதிக மழைப்பொழிவை பெற்றுள்ளது.
  • எவ்வாறாயினும், தரவு கிடைக்கப்பெற்ற ஒவ்வொரு ஐந்து மாவட்டங்களிலும் ஒன்றுக்கு மேற்பட்ட மாவட்டங்கள் என நாட்டில் மொத்தம் 154 மாவட்டங்கள் இப்பருவமழை காலத்தில் குறைவான அல்லது பற்றாக்குறையான மழையைப் பெற்றுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்