TNPSC Thervupettagam

அதிகரித்து வரும் வருவாய்ப் பற்றாக்குறை – தமிழ்நாடு

January 25 , 2025 29 days 101 0
  • தமிழ்நாட்டின் வருவாய்ப் பற்றாக்குறை ஆனது 2013-14 ஆம் ஆண்டு முதல் அதிகப் படியாக அதிகரித்து வருகிறது.
  • தமிழக மாநிலத்தில் கடைசியாக 2012-13 ஆம் ஆண்டில், சுமார் 1,760 கோடி ரூபாய் என்ற வருவாய் உபரிப் பதிவானது.
  • நிதியில் வருவாய் செலவினமானது வருவாய் வரவுகளை விட அதிகமாக இருந்தால், அத்தகையப் பற்றாக்குறை வருவாய் பற்றாக்குறை என்று அழைக்கப்படுகிறது.
  • கோவிட்-19 பெருந்தொற்று பாதிப்பு ஆண்டான 2020-21 ஆம் ஆண்டில் வருவாய்ப் பற்றாக்குறை உச்சத்தை எட்டிய ஒரு நிலையில் அப்போது மாநில அரசின் வருவாய் கணிசமாகக் குறைந்து செலவினங்கள் அதிகரித்தன.
  • நடப்பு ஆண்டின் நிதிநிலை மதிப்பீடுகளில் வருவாய்ப் பற்றாக்குறை 49,279 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டது.
  • 2021-22 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சுமார் 4.86 லட்சம் கோடி ரூபாய் நிலுவைக் கடன் இருந்தது.
  • இது 2025 ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதிக்குள் 8.33 லட்சம் கோடி ரூபாயை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • 2024-25 ஆம் ஆண்டிற்கான மொத்தக் கடன் உச்ச வரம்பு என்பது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.44% ஆக நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்