ஆகஸ்ட் 30 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணிக் கையிருப்பு ஆனது 2.3 பில்லியன் டாலர்கள் உயர்ந்து 683.99 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
இது அதிகபட்சமான டாலர் வரவினால் ஏற்பட்ட தொடர்ச்சியான மூன்றாவது வாராந்திர அந்நியச் செலாவணி கையிருப்பு உயர்வு ஆகும்.
கடந்த மூன்று வாரங்களில் கையிருப்பு ஆனது 13.9 பில்லியன் உயர்ந்துள்ளது.
2024 ஆம் ஆண்டில் மட்டும் மொத்தமாக 60 பில்லியன் டாலர் அந்நியச் செலாவணி கையிருப்பு உயர்ந்துள்ளது.
இந்த வாரத்தில் தங்க கையிருப்பு 862 மில்லியன் டாலர் அளவுக்கு அதிகரித்து, மொத்தமாக 61.859 பில்லியன் டாலராக உள்ளது.