பெங்களூருவின் தேசிய விண்வெளி ஆய்வகமானது (NAL) ஒரு புதிய தலைமுறைத் தொழில்நுட்பத்திலான ஆளில்லா வான்வழி வாகனத்தின் (UAV) முன்மாதிரியை வெற்றிகரமாகப் பறக்கச் செய்து பரிசோதித்துள்ளது.
இது தரையில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் அதிக உயரத்தில் பறக்கக் கூடியது என்பதோடு, முழுவதும் சூரிய சக்தியில் இயங்கக் கூடிய இது மாதக் கணக்கில் வான்வெளியில் இயங்கக் கூடியதும் ஆகும்.
இத்தகைய ஆளில்லா வான்வழி வாகனங்கள் என்பவை HAPS என்ற அல்லது அதிக உயரத்தில் பறக்கும் போலி (சூடோ) செயற்கைக் கோள் வாகனங்கள் அல்லது HALE எனப்படுகின்ற, அதாவது அதிக உயரத்தில் நீண்ட நேரம் இயங்கும் திறன் கொண்ட வாகனங்கள் எனப்படுகின்ற பறக்கும் பொருட்களின் வகையைச் சேர்ந்தவை ஆகும்.