அதிக உயர கண்காணிப்பிற்கான சிறியரக ஆளில்லா ஆகாய வாகனம்
September 8 , 2018 2270 days 690 0
இந்திய தரைப்படை அதிக உயர கண்காணிப்பிற்காக SpyLite என்ற சிறியரக ஆளில்லா ஆகாய விமானத்தை (Unmanned Aerial Vehicle - UAV) தேர்ந்தெடுத்திருக்கின்றது.
இந்தச் சிறியரக ஆளில்லா ஆகாய விமானம் இந்தியாவின் சியன்ட் நிறுவனம் (Cyient) மற்றும் இஸ்ரேலின் புளுபேர்டு ஏரோ சிஸ்டம் (Blue Bird Aero System) ஆகியவற்றின் கூட்டு நிறுவனமான சியன்ட் தீர்வுகள் மற்றும் அமைப்புகள் என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டதாகும்.
SpyLite என்ற வாகனம் 4 முதல் 5 மணி நேரம் வரையிலான தாங்கும் சக்தியையும், அதிகபட்ச பறக்கும் உயரமான 30000 அடிகள் என்ற வரம்பையும் கொண்டு, சியாச்சின் பனிமலை மற்றும் சீனாவின் எல்லைப் பகுதிகளின் மீதான நடவடிக்கைகளுக்கு உகந்ததாக உள்ளது.