TNPSC Thervupettagam

அதிக உள்நோயாளிகள் பிரிவு சிகிச்சை

January 16 , 2020 1690 days 690 0
  • ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பிரதேசமானது நாட்டில் மிக அதிகமான உள்நோயாளிகள் பிரிவு சிகிச்சையை (Inpatient Department - IPD) பதிவு செய்துள்ளது.
  • மாநில வாரியாக உள்ள இந்த அறிக்கையானது புது டெல்லியில் உள்ள தேசிய சுகாதார அமைப்புகள் வள மையத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
  • இந்த அறிக்கையின் படி, ஜம்மு காஷ்மீரில் உள்ள அனைத்துப் பெண்களும் பேறுகாலத்திற்கு முந்தை (Antenatal Care - ANC) சிகிச்சைகளைப் பெறுகின்றனர்.
  • மேலும், ஜம்மு காஷ்மீரில் உள்ள கிராமப் புறங்களில் வழங்கப்படும் 96 சதவீத IPD சிகிச்சையானது பொதுச் சுகாதார நிலையங்களால் வழங்கப்படுகின்றது. இது நாட்டின் சராசரியான 85 சதவீதத்தை விட மிக அதிகமாக உள்ளது.
  • 2016 ஆம் ஆண்டில், இந்தியாவில் ஜம்மு காஷ்மீர் ஒன்றியமானது பிறக்கும்போதே எதிர்பார்க்கப்படும் ஆயுட்காலம் தவிர்த்து, அனைத்து வயதினரிடையே அதிக ஆயுட்கால எதிர்பார்ப்பு கொண்டதாக கேரளாவை விஞ்சியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்