தமிழ்நாடு மாநில அரசானது, புவியின் நிலையான பயன்பாடு சார்ந்த பொருட்களின் உற்பத்தி நிறுவனங்கள், அதிக ஊக்கமளிப்பு அவசியமான துறைகள் திட்டத்தின் கீழ் பலன்களை பெறும் வகையில் அந்தத் திட்டத்தின் நோக்க எல்லையினை விரிவுபடுத்தி உள்ளது.
இந்தத் திட்டம் மூலம், மிகவும் தகுதியான குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு (MSME) சுமார் 25% அல்லது அதிகபட்சமாக 1.5 கோடி ரூபாய் மூலதன மானியம் வழங்கப்படும்.
இந்த அலகுகள் உத்யன் தளத்தில் பதிவு செய்திருக்க வேண்டும் என்பதோடு மேலும், அதிக ஊக்கமளிப்பு அவசியமான துறையில் சேர்க்கப்படுவதற்கான வகையில் நன்கு அடையாளம் காணப்பட்ட சுமார் 26 தயாரிப்புகளில் ஏதேனும் ஒரு பொருளினைத் தயாரிக்கும் நிறுவனமாக அது இருக்க வேண்டும்.