ஹருண் ஆராய்ச்சி நிறுவனமானது ஹருண் இந்தியக் கலைப் பட்டியலின் முதலாவது பதிப்பை வெளியிட்டுள்ளது.
இது 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை கலைஞர்கள், தங்களதுப் படைப்புகளை பொது ஏலத்தில் விற்பனை செய்ததன் அடிப்படையில் சமகாலத்தில் வாழும் இந்தியக் கலைஞர்களை தர வரிசைப்படுத்தியுள்ளது.
ஐக்கிய இராஜ்ஜியத்தைச் சேர்ந்த சிற்பியான அனிஷ் கபூர் என்பவர் இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இவரது படைப்புகள் ரூ. 168.25 கோடிக்கு விற்பனையாகின.
இவருக்கு அடுத்து இந்தப் பட்டியலில் அக்பர் பத்மஸி (ரூ.45.84 கோடி) மற்றும் கிரிஷேன் கண்ணா (ரூ.9.48 கோடி) ஆகிய கலைஞர்கள் உள்ளனர்.
கிரிஷேன் கண்ணா என்பவர் உலகம் முழுவதும் உள்ள 100 கலைஞர்களினால் மேற்கொள்ளப்பட்ட “தாஷ் கீ பட்டி” என்ற பணியில் இவரது பங்களிப்பிற்காக சிறப்பாக அறியப்படுகின்றார்.