TNPSC Thervupettagam

அதிக ஊதியம் பெறும் கலைஞர்கள்

May 16 , 2019 2019 days 764 0
  • ஹருண் ஆராய்ச்சி நிறுவனமானது ஹருண் இந்தியக் கலைப் பட்டியலின் முதலாவது பதிப்பை வெளியிட்டுள்ளது.
  • இது 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை கலைஞர்கள், தங்களதுப் படைப்புகளை பொது ஏலத்தில் விற்பனை செய்ததன் அடிப்படையில் சமகாலத்தில் வாழும் இந்தியக் கலைஞர்களை தர வரிசைப்படுத்தியுள்ளது.
  • ஐக்கிய இராஜ்ஜியத்தைச் சேர்ந்த சிற்பியான அனிஷ் கபூர் என்பவர் இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இவரது படைப்புகள் ரூ. 168.25 கோடிக்கு விற்பனையாகின.
  • இவருக்கு அடுத்து இந்தப் பட்டியலில் அக்பர் பத்மஸி (ரூ.45.84 கோடி) மற்றும் கிரிஷேன் கண்ணா (ரூ.9.48 கோடி) ஆகிய கலைஞர்கள் உள்ளனர்.
  • கிரிஷேன் கண்ணா என்பவர் உலகம் முழுவதும் உள்ள 100 கலைஞர்களினால் மேற்கொள்ளப்பட்ட “தாஷ் கீ பட்டி” என்ற பணியில் இவரது பங்களிப்பிற்காக சிறப்பாக அறியப்படுகின்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்