மொத்தம் 8.42 லட்சம் உழைப்பு நாட்களுடன், தமிழக மாநிலமானது மிகத் துடிப்பு மிக்க தொழில்துறைகளின் மையமாக, குறிப்பாக உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில் தன்னை உறுதியாக நிலை நிறுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மற்றும் குஜராத் போன்ற மாநிலங்களை விஞ்சி, நாட்டிலேயே அதிக உழைப்பு நாட்களை தமிழகம் பெற்றுள்ளது.
இது ஒரு பணியாளருக்குச் சராசரி உழைப்பு நாட்கள் என்ற வீதத்தில் குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களை பின்தள்ளியுள்ளது.
சுமார் 6.45 லட்சம் ஊழியர்களைக் கொண்ட மகாராஷ்டிரா மற்றும் சுமார் 5.28 லட்சம் ஊழியர்களைக் கொண்ட குஜராத் ஆகியவை, சுமார் 4.81 லட்சம் ஊழியர்களைக் கொண்ட தமிழகத்தை விட அதிக மூலதன முதலீடுகளைக் கொண்டுள்ளன.
தமிழகத்தின் சராசரி உழைப்பு நாட்கள் ஒரு ஊழியருக்கு 1.75 ஆகும் என்ற நிலையில், இது மகாராஷ்டிராவில் 1.13 மற்றும் குஜராத்தில் 1.37 ஆகும்.