TNPSC Thervupettagam

அதிக எண்ணிக்கையிலான புவிசார் குறியீடு பெற்றத் தயாரிப்புகளைக் கொண்ட இரண்டாவது மாநிலம்

May 20 , 2023 427 days 771 0
  • உத்தரப் பிரதேசம் தேசிய அளவில் அதிக எண்ணிக்கையிலான புவிசார் குறியீடு பெற்றத் தயாரிப்புகளைக் கொண்ட இரண்டாவது மாநிலமாக மாறியுள்ளது.
  • சமீபத்தில் இந்த மாநிலம் மைன்புரி தர்காஷி, மஹோபா கவுரா கல்சார்ந்த கைவினைப் பொருள் மற்றும் இருவாச்சியின் கொம்பில் செய்யப்பட்ட கைவினைப் பொருட்கள் ஆகிய மூன்று கைவினைகளுக்கானப் புவிசார் குறியீடுகளைப் பெற்றுள்ளது.
  • தற்போது தமிழ்நாடு அதிகபட்சமாக 55 புவிசார் குறியீடு பெற்றத் தயாரிப்புகளையும், உத்தரப் பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகியவை முறையே 48 மற்றும் 46 புவிசார் குறியீடு பெற்றத் தயாரிப்புகளையும் கொண்டுள்ளன.
  • 36 கைவினைப் பொருட்களுக்குப் புவிசார் குறியீடு பெற்றதையடுத்து புவிசார் குறியீடு பெற்ற கைவினைப் பொருட்களின் எண்ணிக்கையில் உத்தரப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது.
  • புவிசார் குறியீடு வழங்கப் பட்டுள்ள 23 கைவினைப் பொருட்களில் வாரணாசி பகுதிக்கு மட்டும் இதே வகையைச் சேர்ந்த 18 தயாரிப்புகளுக்குப் புவிசார் குறியீடு வழங்கப் பட்டு உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்