TNPSC Thervupettagam

அதிக எண்ணிக்கையிலான பெண் உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள்

November 23 , 2024 17 hrs 0 min 19 0
  • மாநிலங்களிலேயே தமிழகத்தில் தான் அதிக எண்ணிக்கையிலான பெண் மன்ற உறுப்பினர்கள் (கவுன்சிலர்கள்) உள்ளனர்.
  • இராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, உத்தரப் பிரதேசம், கேரளா, பீகார் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய சில மாநிலங்கள் இந்த எண்ணிக்கையின் அடிப்படையில் முதல் 10 இடங்களில் உள்ள மற்ற மாநிலங்கள் ஆகும்.
  • இந்தியாவில் 17 மாநில அரசுகளானது, அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப் பட்டு உள்ள குறைந்தபட்சம் 33% இட ஒதுக்கீட்டிற்கும் மேலாகப் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீட்டினை வழங்குவதற்கான சட்டத்தினை இயற்றியுள்ளன.
  • இந்தியாவில் உள்ள உள்ளாட்சி மன்ற உறுப்பினர்களில் சுமார் 46% பேர் பெண்கள் ஆவர்.
  • பாட்னா, சிம்லா, ராஞ்சி மற்றும் புவனேஸ்வர் உட்பட, செயல்பாட்டில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளைக் கொண்ட 21 தலைநகரங்களுள் 19 தலைநகரங்களில், இந்த எண்ணிக்கை 60 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்