அதிக எண்ணிக்கையிலான MBBS சேர்க்கை இடங்கள்
February 21 , 2023
645 days
320
- 11,275 MBBS இடங்களுடன் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
- அதைத் தொடர்ந்து 10,995 இடங்களைக் கொண்டு கர்நாடகா இரண்டாமிடத்தில் உள்ளது.
- மகாராஷ்டிரா 10,295 இடங்களுடன் 3வது இடத்திலும், உத்தரப் பிரதேசம் 9,203 MBBS இடங்களுடன் 4வது இடத்திலும் உள்ளன.
- ஒட்டு மொத்தமாக, நாட்டில் உள்ள 655 மருத்துவக் கல்லூரிகளில் தற்போது 1,00,163 MBBS இடங்கள் உள்ளன.
- சுகாதாரத் துறை அமைச்சகத்தின் அறிக்கையின்படி, மொத்தம் 65,335 முதுநிலைக் கல்வி மருத்துவச் சேர்க்கை இடங்கள் தற்போது உள்ளன.
- இதில் அதிகபட்சமாக கர்நாடகா மாநிலத்தில் 6,006 இடங்களும், மகாராஷ்டிராவில் 5,765 இடங்களும், தமிழ்நாட்டில் 4,935 இடங்களும் உள்ளன.
Post Views:
320