அதிக தூரத்தில் உள்ள கதிர்வீச்சு (ரேடியோ) பால்வெளி மண்டலம்
August 15 , 2018 2294 days 728 0
பூனாவைச் சேர்ந்த வானியலாளர்கள் இந்திய தொலைநோக்கியான மிகப்பெரிய மீட்டர் அலை ரேடியோ தொலைநோக்கியான GMRT ஐ (Giant Metre Wave Radio Telescope - GMRT) பயன்படுத்தி இதுவரை அறியப்படாத அதிக தூரத்தில் உள்ள பால்வெளி மண்டலத்தினைக் கண்டறிந்துள்ளனர்.
இது 12 பில்லியன் ஒளி ஆண்டு தூரத்தில் அமைந்துள்ளது. கதிர்வீச்சு (ரேடியோ) பால்வெளி மண்டலம் அண்டத்தில் ஒரு அரிதான பொருள் ஆகும்.
பிரபஞ்சம் தற்போதைய வயதில் எப்பொழுது 7 சதவீதமாக இருந்ததோ அந்தக் காலத்தைச் சேர்ந்தது இந்த கதிர்வீச்சு பால்வெளி மண்டலம்.
GMRT என்பது 45 மீட்டர் விட்டம் கொண்ட முழு நீள ஓட்டமான பரவளைய ரேடியோ தொலைநோக்கியாகும்.
இது ரேடியோ வானியற்பியலுக்கான தேசிய மையத்தினால் செயல்படுத்தப்படுகிறது.
இந்த பால்வெளி மண்டலத்தின் தூரமானது ஹவாயில் உள்ள ஜெமினி வட தொலைநோக்கி மற்றும் அரிசோனாவில் உள்ள பெரிய நீள்தூர தொலைநோக்கி ஆகியவற்றால் கணக்கிடப்பட்டது.