உலகின் ஒரு முன்னணி கோழி இறைச்சி ஏற்றுமதி நாடான பிரேசில், முதன்முறையாக அதிக நோய்த் தொற்றுமிக்கப் பறவைக் காய்ச்சல் (HPAI) பாதிப்பினை உறுதி செய்து உள்ளது.
பறவைக் காய்ச்சல் வைரஸ் பறவைகளின் மொத்த குழுக்களையும் கொன்று வேளாண் துறைக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தக் கூடியது ஆகும்.
மற்ற நாடுகள் இந்த வைரஸின் உலகளாவிய பாதிப்பில் தத்தளித்த சமயத்தில், பிரேசில் நாட்டின் கோழி இறைச்சி ஏற்றுமதியானது, கடந்த ஆண்டு 27% அளவு அதிகரித்து 9.76 பில்லியன் டாலராக இருந்தது.