TNPSC Thervupettagam

அதிவிரைவான ரேடியோ அலைப் பரவலுக்கான மூல ஆதாரம்

April 7 , 2023 471 days 253 0
  • பல ஆண்டுகளாக, வானியலாளர்கள் ஒரு சிறப்பு வகையான ரேடியோ சமிக்ஞை-அதி விரைவான ரேடியோ அலைப்பரவல் (வெடிப்புகள்) குறித்தும், அதன் மூலம் எது என்பது குறித்தும் குழப்பமடைந்து வந்தனர்.
  • ஆனால் தற்போது அறிவியலாளர்கள் இதற்கு என்ன காரணம் என்று (நியூட்ரான் நட்சத்திரங்கள் மோதி கருந்துளைகளாக மாறுதல்) கண்டுபிடித்துள்ளனர்.
  • அதிவிரைவான ரேடியோ அலைப்பரவல் என்பது தீவிரமான ஆனால் சில மில்லி விநாடிகள் மட்டுமே நீடிக்கக் கூடிய குறுகிய ரேடியோ சமிக்ஞைகள் ஆகும்.
  • சமீபத்தில், வானியலாளர்கள் ஈர்ப்பு அலைகளின் பரவலை உருவாக்குகிற வகையில் இரண்டு நியூட்ரான் நட்சத்திரங்கள் மோதி ஒரு கருந்துளையாக மாறுவதை ஆய்வு செய்தனர்.
  • இந்த நிகழ்வுக்குப் பிறகு, ஒரு அதிவிரைவான ரேடியோ அலைப்பரவலை இது  உருவாக்கியதாகத் தெரிகிறது.
  • எனவே, இது போன்ற இரண்டு நியூட்ரான் நட்சத்திரங்கள் ஒன்றிணைவது சில விசித்திரமான ரேடியோ அலைகளை ஏற்படுத்தியிருக்கலாம்.
  • ஆனால் இது உண்மையில் அதிவிரைவான ரேடியோ அலைப்பரவலுக்கு (FRB 20190520B) மட்டுமே பொருந்தும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்