ஐரோப்பிய ஒன்றியத்தின் கோப்பர்நிக்கஸ் பருவநிலை மாற்ற சேவை (C3S) நிறுவனம் ஆனது, 2023 ஆம் ஆண்டு புவியின் வெப்பமான ஆண்டு என்றும், கடந்த 100,000 ஆண்டுகளில் இது உலகின் மிக வெப்பமான ஆண்டு என்றும் அறிவித்தது.
மனிதர்கள் அதிக அளவு புதைபடிவ எரிபொருட்களை எரிக்கத் தொடங்குவதற்கு முன்னதாக பதிவான நீண்ட காலச் சராசரியை விட கடந்த ஆண்டு 1.48C வெப்பம் அதிகமாக இருந்தது.
கடந்த ஆண்டு ஆனது 2016 ஆம் ஆண்டை- முந்தைய வெப்பமான ஆண்டு - விட 0.17C (0.31F) வெப்பமாக இருந்ததோடு, இது "குறிப்பிடத்தக்க" வித்தியாசத்தில் இந்த அளவை முறியடித்தது.
முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது, ஜூன் மாதம் முதல் ஒவ்வொரு மாதமும் உலகிலேயே அதிக வெப்பம் பதிவாகியுள்ளது.
கடந்த ஆண்டு, வளிமண்டலத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடின் செறிவு ஒரு மில்லியனுக்கு 419 பாகங்கள் என்ற மிக உயர்ந்த நிலைக்கு அதிகரித்தது.