2024 ஆம் ஆண்டின் கோடைக்காலமானது, வடக்கு அரைக்கோளத்தில் பதிவு ஆன மிக வெப்பமான கோடைக்காலமாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் வட திசை சார் கோடை மாதங்கள் ஆனது இதற்கு முந்தையதாக பதிவான அனைத்து அதிக வெப்பநிலைப் பதிவுகளையும் விஞ்சியது.
2024 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட வரலாற்றின் வெப்பமான ஆண்டாக 2023 ஆம் ஆண்டினை விஞ்சுவதற்கான பாதையில் உள்ளது.
மனிதனால் தூண்டப்பட்டப் பருவநிலை மாற்றம் மற்றும் எல் நினோ பருவநிலை நிகழ்வு ஆகியவற்றின் ஒருங்கிணைந்த நிலையே இந்த சாதனை அளவினை விஞ்சும் வெப்பநிலைக்குக் காரணமாகும்.
எல் நினோ, கிழக்கு பசிபிக் பெருங்கடலில் மேற்பரப்பு நீர் வெப்பமடைவதன் மூலம் வகைப்படுத்தப்படுகிறது.
2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இரண்டாவது மிக அதிகபட்ச சராசரி கடல் மேற் பரப்பு வெப்பநிலை பதிவு செய்யப்பட்டது என்பதோடு இது 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பதிவான அளவை விஞ்சியது.
இத்தாலி, சிசிலி மற்றும் சர்தினியா போன்ற பகுதிகள் பருவநிலை மாற்றத்துடன் நேரடியாக தொடர்புடைய கடுமையான வறட்சி காரணமாக தொடர்ந்து மோசமான நிலையினை எதிர்கொண்டு வருகின்றன.