TNPSC Thervupettagam

அதிவேகத் தொழில்நுட்ப செயல்முறை விளக்க வாகனம்

September 11 , 2020 1540 days 661 0
  • டிஆர்டிஓ அமைப்பானது அதிவேகத் தொழில்நுட்ப செயல்முறை விளக்க வாகனத்தை வெற்றிகரமாக சோதித்துப் பார்த்துள்ளது.
  • இது அதிவேக விமானங்களில் பயன்படுத்தப்படும் ஒரு ஆளில்லா வேகப்பீற்று விசை வானூர்தி செயல்முறை விளக்க விமானமாகும் (unmanned scramjet demonstration aircraft).
  • அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்குப் பிறகு உலகில் இது போன்ற ஒரு சோதனையை மேற்கொண்ட நான்காவது நாடு இந்தியா ஆகும்.
  • இது மீயொலி உயர் வேகம் (Hypersonic speed) எனப்படும் ஒலியின் வேகத்தைவிட 6 மடங்கு வேகத்தில் ஏவுகணைகள் பயணிக்க உதவுகின்றது.
  • இந்தச் சோதனையானது மீயொலி உயர்வேக ஏவுகணையின் மேம்பாட்டிற்கு வழி வகுக்கின்றது.

உதவும் பங்காளர்கள்

  • இஸ்ரேல் காற்று சுரங்க வழிச் சோதனையில் உதவியது.
  • ரஷ்யாவானது மீயொலி உயர்வேக உந்து விசையின் ஆராய்ச்சியில் உதவி செய்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்