அசாம், ஒடிசா, சீனா, ஐக்கியப் பேரரசு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த அறிவியலாளர்கள் குழுவானது நீர் விலக்குத் தன்மைக் கொண்ட வினையூக்கியை உருவாக்கியுள்ளது.
இது "சுற்றுச்சூழலுக்கு தீங்கற்ற" உயிரி டீசலை உற்பத்தி செய்வதற்கான செலவை தற்போதைய அளவிலிருந்து கணிசமான வகையில் குறைக்கும்.
இது உயிரி டீசல் உற்பத்தியின் போது நீர் கொண்ட விளை பொருளினை தாங்கும் வகையிலான "கோள வடிவ அதி நீர்விலக்குத் தன்மை கொண்ட ஒரு செயலாக்கப்பட்ட கார்பன் வினையூக்கியை" அடையும் செயல்முறையாகும்.
அதி நீர்விலக்குத் தன்மை கொண்ட வினையூக்கிகள், தாமரை இலைகள் போன்ற இயற்கையான மேற்பரப்புகளில் ஈரம் எதிர்ப்பு அல்லது தண்ணீரை விலக்கும் பண்புகளைப் கொண்டுள்ளது.
இந்த வினையூக்கியானது, மிகவும் பயனுள்ளதாக உள்ளது மற்றும் பல முறை மீண்டும் பயன்படுத்தப்படும் வகையிலானது ஆகும் என்ற வகையில் இது வினையூக்கச் செயல்முறையை மிகவும் திறன் மிக்கதாகவும், செலவு குறைந்ததாகவும் மாற்றுகிறது.