TNPSC Thervupettagam

அத்திக்கடவு-அவிநாசி திட்டம் 2024

August 20 , 2024 95 days 202 0
  • தமிழகத்தில் 67 ஆண்டுகளுக்கு முன்பு கருத்துருவாக்கப்பட்ட அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தின் பணிகளானது இறுதியாக சமீபத்தில் தொடங்கப்பட்டது.
  • ஈரோடு மாவட்டம் காலிங்கராயன்பாளையத்தில் உள்ள பவானி ஆற்றின் காலிங்கராயன் அணைக்கட்டின் கீழ் மட்ட நீரோட்டத்தில் இருந்து 1.5 ஆயிரம் மில்லியன் கன அடி (TMC) உபரி நீரை திருப்பி விட இத்திட்டம் முனைகிறது.
  • ஈரோடு, திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் 1,045 நீர்நிலைகளை நிரப்பவும், 24,468 ஏக்கர் வேளாண் நிலங்கள் பாசனம் பெறுவதற்காகவும் என்று இந்த நதிநீர் திசை திருப்பப் பட்டது.
  • 1957 ஆம் ஆண்டில் அப்போதைய முமாநில தல்வர் K.காமராஜ் அவர்கள், முந்தைய கோயம்புத்தூர் மாவட்டத்தில் திறந்தவெளி கால்வாய்கள் மூலம் தண்ணீரைத் திசை திருப்பி, வறண்ட நீர் நிலைகளை நிரப்பும் திட்டத்தினை அறிவித்தார்.
  • இந்தத் திட்டத்திற்கு முதலில் பவானி நதியின் மேல் மட்ட நீரோட்டத் திட்டம் என்று பெயரிடப்பட்டது.
  • 2009 ஆம் ஆண்டில், இந்தத் திட்டத்தின் சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்வதற்காக A. மோகனகிருஷ்ணன் என்பவர் தலைமையில் ஒரு தொழில்நுட்ப வல்லுநர் குழுவானது அமைக்கப் பட்டது.
  • 1972 ஆம் ஆண்டில், இந்தத் திட்டம் ஆனது அத்திக்கடவு-அவிநாசி நிலத்தடி நீரேற்றல் மற்றும் குடிநீர் வழங்கீட்டுத் திட்டம் என மறுபெயரிடப்பட்டது.
  • 1,652 கோடி ரூபாய் மாதிப்பிலான திட்டத்திற்கான அடிக்கல் ஆனது 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 ஆம் தேதியன்று நாட்டப்பட்டு, 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் தேதி அன்று தொடங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்