TNPSC Thervupettagam

அத்திக்கடவு – அவினாசி திட்டம்

March 1 , 2019 1968 days 4701 0
  • தமிழக முதல்வர் பிப்ரவரி 28-ம் தேதி திருப்பூரில் உள்ள நத்தம்பாளையத்தில் அத்திக்கடவு – அவினாசி குடிநீர் விநியோகம் மற்றும் பாசனத் திட்டத்திற்கான அடிக்கல்லை நாட்டினார்.
  • இத்திட்டம் முதலில் 62 வருடங்களுக்கு முன்பு முன்மொழியப்பட்டது.
  • இத்திட்டம் பவானி நதியில் வரும் கூடுதலான நீரைக் கொண்டு கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் உள்ள வறட்சியான பகுதிகளின் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்திடும் நோக்கில் அப்பகுதிகளில் ஏரிகள், குளங்கள் மற்றும் இதர நீர்நிலைகளை நிரப்பிட திட்டமிடுகின்றது.
  • பவானி அருகேயுள்ள காளிங்கராயன் அணைக் கட்டிலிருந்து 1.5 டிஎம்சி அளவிற்கு கூடுதலான நீர் இதற்காக வெளியேற்றப்படும். இதற்கான திட்ட ஒதுக்கீடு 1800 கோடிகளாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்