தமிழக முதல்வர் பிப்ரவரி 28-ம் தேதி திருப்பூரில் உள்ள நத்தம்பாளையத்தில் அத்திக்கடவு – அவினாசி குடிநீர் விநியோகம் மற்றும் பாசனத் திட்டத்திற்கான அடிக்கல்லை நாட்டினார்.
இத்திட்டம் முதலில் 62 வருடங்களுக்கு முன்பு முன்மொழியப்பட்டது.
இத்திட்டம் பவானி நதியில் வரும் கூடுதலான நீரைக் கொண்டு கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் உள்ள வறட்சியான பகுதிகளின் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்திடும் நோக்கில் அப்பகுதிகளில் ஏரிகள், குளங்கள் மற்றும் இதர நீர்நிலைகளை நிரப்பிட திட்டமிடுகின்றது.
பவானி அருகேயுள்ள காளிங்கராயன் அணைக் கட்டிலிருந்து 1.5 டிஎம்சி அளவிற்கு கூடுதலான நீர் இதற்காக வெளியேற்றப்படும். இதற்கான திட்ட ஒதுக்கீடு 1800 கோடிகளாகும்.