மத்திய அமைச்சரவையானது 1955 ஆம் ஆண்டின் அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றங்களைச் செய்துள்ளது.
1955 ஆம் ஆண்டின் அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களின் கீழ், பருப்பு வகைகள், தானியங்கள், வெங்காயம், எண்ணெய் வித்துக்கள், உருளைக்கிழங்கு போன்ற வேளாண் பொருட்கள் ஒழுங்குபடுத்தும் முறையிலிருந்து விலக்கப் பட்டுள்ளன.
இது தனியார் முதலீட்டாளர்களை அதிகப்படியான ஒழுங்குமுறைத் தலையீடு குறித்த பயத்திலிருந்து மீட்டெடுத்து உதவ இருக்கின்றது.
மேலும், இந்த திருத்தமானது மிகவும் நெருக்கடியான காலக்கட்டங்களில் மட்டுமே கையிருப்பு வரம்பைக் கட்டாயப்படுத்தி அமல்படுத்த அனுமதியளிக்க இருக்கின்றது.
வறட்சி மற்றும் இயற்கைப் பேரிடர் போன்றவை இதில் அடங்கும்.
இந்தக் கையிருப்பு வரம்பானது செயல்பாட்டாளர்கள் மற்றும் மதிப்புக் கூட்டினை அதிகப்படுத்துவதற்காக செயல்படும் பங்கேற்பாளர்களுக்குப் பொருந்தாது.