அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்குப் பெயரிடுதல்
December 7 , 2022 720 days 421 0
அந்தமான் & நிக்கோபார் ஒன்றியப் பிரதேசத்தில் உள்ள மக்கள் எவரும் வசிக்காத 21 தீவுகளுக்கு அரசாங்கம் பெயரிட்டுள்ளது.
நாட்டின் மிக உயரியப் போர் முறை வீர விருதான பரம் வீர் சக்ராவைப் பெற்ற வீரர்களின் நினைவாக அந்தத் தீவுகளுக்குப் பெயரிடப்பட்டுள்ளது.
மொத்தம் 21 தீவுகளில், 16 தீவுகள் வடக்கு மற்றும் மத்திய அந்தமான் மாவட்டத்திலும், ஐந்து தீவுகள் தெற்கு அந்தமான் பகுதியிலும் உள்ளன.
வடக்கு மற்றும் மத்திய அந்தமானில் உள்ள ‘INAN370’ என்ற எண் கொண்ட முதல் மக்கள் வசிக்காத தீவிற்கு மேஜர் சோம்நாத் சர்மா அவர்களின் நினைவாகப் பெயர் சூட்டப்பட்டது.
இனி ‘INAN370’ தீவானது ‘சோம்நாத் த்வீப்’ என்று அழைக்கப்படும்.
இவர் முதலாவது பரம் வீர் சக்ரா விருதினைப் பெற்ற முதல் நபர் ஆவார்.