புது டெல்லியில் உள்ள தேசிய பார்வைத் திறனற்றவர் சங்கத்துடன் (NAB) இணைந்து, பார்வைத் திறன் குறைபாடுள்ள நபர்களின் அதிகாரமளிப்புக்கான தேசிய நிறுவனம் (திவ்யாங்ஜன்), ஆனது 'அந்தர் த்ரிஷ்டி' - ஒரு மிகவும் தனித்துவமான உணர்வு சார் அடையாளம் காணும் இருள் அறையைத் துவக்கியுள்ளது.
'அந்தர் த்ரிஷ்டி' என்பது பார்வைத் திறன் குறைபாடுள்ள நபர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் சமூகத்தினரை அது குறித்து உணர வைப்பதையும் நோக்கமாகக் கொண்ட பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட உணர்வுப்பூர்வ அனுபவ இடமாகும்.
NIEPVDஆனது 'உள்ளடக்கச் சேர்ப்பு' செயலியைச் செயல்படுத்த உள்ளது.
இது வளர்ச்சிக் குறைபாடுகள் உள்ள குழந்தைகளை முன்கூட்டியே நன்கு அடையாளம் காணுதல், நடவடிக்கை மேற்கொள்ளுதல் மற்றும் கண்காணிப்பதற்காக அமர் சேவா சங்கத்தினால் உருவாக்கப்பட்ட ஒரு எண்ணிமத் தளமாகும்.