ஆந்திரத்தின் கர்நூல் மாவட்டத்தில் உற்பத்தியாகும் அந்திரி நதியை அனந்தபூர், கடப்பா ஆகிய மாவட்டங்களின் வழியாக சித்தூர் மாவட்டத்தில் பாயும் நீவா நதியோடு இணைப்பதுதான் "அந்திரி நீவா ' கால்வாய் திட்டம்.
ஆந்திர முதல்வர் செயல்படுத்தி வரும் "அந்திரி நீவா' என்ற நதிநீர் இணைப்புக் கால்வாய் திட்டத்தால் தமிழக எல்லையோர வனப் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும் வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது.
இத்திட்டம் என்.டி. ராமாராவின் கனவு திட்டமாகும்.
இதன் மூலம்ஆந்திர கவுண்டன்யா வனவிலங்குகள் சரணாலயக் காடுகளும், அதையொட்டியுள்ள தமிழகத்தின் எல்லையில் வேலூர் மாவட்டத்தின் பேர்ணாம்பட்டு, ஆம்பூர், திருப்பத்தூர் வனச்சரக காப்புக் காடுகளும் அந்திரி நீவா கால்வாயால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து காடுகள் மேலும் வளமாக மாறும். மேலும், தமிழக வனப்பகுதி எல்லையோரம் உள்ள விவசாய நிலங்களிலும் வளம் கொழிக்க வாய்ப்புகள் உள்ளன.