இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஆனது 2022 ஆம் ஆண்டில் 70.1 பில்லியன் டாலர்கள் குறைந்துள்ளது.
டிசம்பர் 30 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பு ஆனது 562.9 பில்லியன் டாலராக இருந்தது.
2022 ஆம் ஆண்டில் அமெரிக்க டாலருக்கு இணையான ரூபாயின் மதிப்பு 10.2% வரை சரிந்தது.
2022-ஆம் ஆண்டில், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் உள்நாட்டு பங்குச் சந்தையில் இருந்து ரூ.1.2 லட்சம் கோடியைத் திரும்பப் பெற்றனர்.
வெளிநாட்டு நிறுவனம் சார்ந்த முதலீட்டாளர்கள், தங்கள் பங்கு சார்ந்த முதலீட்டை ரூபாய் மதிப்பில் விற்பனை செய்து, அதை டாலராக மாற்றிப் பணத்தைத் திரும்பப் பெறுகிறார்கள்.
அந்நியச் செலாவணி கையிருப்பு ஆனது, 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இது வரை இல்லாத அளவுக்கு 642.5 பில்லியனை எட்டியது.