TNPSC Thervupettagam

அந்நியச் செலாவணி மேலாண்மை (கடன் சாரா) திருத்த விதிகள், 2024

August 22 , 2024 93 days 106 0
  • நிதி அமைச்சகம் ஆனது, 2019 ஆம் ஆண்டு அந்நிய செலாவணி மேலாண்மை (கடன் சாராத அம்சங்கள்) விதிகள் 16.08.2024 தேதியிட்ட அறிவிப்பின் படி திருத்தியமைத்து உள்ளது.
  • இது பன்னாட்டுப் பங்கு பரிமாற்றங்களை எளிதாக்கச் செய்வதையும், வெளிநாட்டு நிறுவனப் பங்குகளுக்கு ஈடாக இந்திய நிறுவனப் பங்குகளை வெளியிடுவது அல்லது பரிமாற்றம் செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது இணைப்புகள், கையகப்படுத்துதல்கள் மற்றும் பிற உத்திசார் முயற்சிகள் மூலம் இந்திய நிறுவனங்களை உலகளவில் விரிவுப்படுத்துவதை எளிதாக்குவதோடு, மேலும் அவை புதியச் சந்தைகளை அடையவும் உலகளவில் தங்கள் இருப்பை மேம்படுத்தவும் உதவும்.
  • இது வெளிநாடு வாழ் இந்தியக் குடிமக்களுக்கு (OCI) சொந்தமான நிறுவனங்களால் திருப்பி அனுப்பப் படாத வகையின் ஒரு அடிப்படையில் மேற்கொள்ளப்படும் பல்வேறு முதலீடுகளை வெளிநாடு வாழ் இந்தியர்களின் (NRI) நிறுவனங்களால் மேற்கொள்ளப் படும் முதலீடுகளுக்கு இணையாக கையாள்வதை தெளிவுபடுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்