TNPSC Thervupettagam

அந்நிய நேரடி முதலீடு - இந்தியா

May 31 , 2019 1878 days 634 0
  • தொழிற்துறை ஊக்குவிப்பு மற்றும் உள்நாட்டு வணிகத் துறையின் (Department for Promotion of Industry and Internal Trade - DPIIT) சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த ஆறு ஆண்டு காலத்தில் இல்லாத அளவிற்கு இந்தியாவில் 2018-19 ஆம் ஆண்டில் அந்நிய நேரடி முதலீடு (FDI - Foreign Direct Investment) முதன்முறையாக குறைந்துள்ளது.
  • தொலைத் தொடர்பு, மருந்துகள் மற்றும் மின்சாரம் போன்ற துறைகளில் வெளிநாட்டு நிதி முதலீடுகள் குறைந்துள்ளன.
  • இந்த ஆண்டில் மொரீஷியஸ் நாட்டிலிருந்து இந்தியாவிற்குள் வரும் அந்நிய நேரடி முதலீட்டை விடவும் இரண்டு மடங்கு அதிக அந்நிய நேரடி முதலீடுகள் சிங்கப்பூர் நாட்டில் இருந்து பெறப்பட்டுள்ளன.
    • இதற்கு முன் மொரீஷியஸ் முதலிடத்தில் இருந்தது.
  • ஜப்பான், நெதர்லாந்து, ஐக்கிய இராஜ்ஜியம், அமெரிக்கா, ஜெர்மனி, சைப்ரஸ், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பிரான்சு ஆகிய நாடுகள் இந்தியாவின் பிற முக்கிய முதலீட்டாளர்களாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்