தொழிற்துறை ஊக்குவிப்பு மற்றும் உள்நாட்டு வணிகத் துறையின் (Department for Promotion of Industry and Internal Trade - DPIIT) சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த ஆறு ஆண்டு காலத்தில் இல்லாத அளவிற்கு இந்தியாவில் 2018-19 ஆம் ஆண்டில் அந்நிய நேரடி முதலீடு (FDI - Foreign Direct Investment) முதன்முறையாக குறைந்துள்ளது.
தொலைத் தொடர்பு, மருந்துகள் மற்றும் மின்சாரம் போன்ற துறைகளில் வெளிநாட்டு நிதி முதலீடுகள் குறைந்துள்ளன.
இந்த ஆண்டில் மொரீஷியஸ் நாட்டிலிருந்து இந்தியாவிற்குள் வரும் அந்நிய நேரடி முதலீட்டை விடவும் இரண்டு மடங்கு அதிக அந்நிய நேரடி முதலீடுகள் சிங்கப்பூர் நாட்டில் இருந்து பெறப்பட்டுள்ளன.
இதற்கு முன் மொரீஷியஸ் முதலிடத்தில் இருந்தது.
ஜப்பான், நெதர்லாந்து, ஐக்கிய இராஜ்ஜியம், அமெரிக்கா, ஜெர்மனி, சைப்ரஸ், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பிரான்சு ஆகிய நாடுகள் இந்தியாவின் பிற முக்கிய முதலீட்டாளர்களாகும்.