இந்தியாவானது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் பொழுது அந்நிய நேரடி முதலீட்டில் (FDI) 13% அதிகரிப்பை, அதாவது 57 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.
உள்நாட்டு உயர்வானது டிஜிட்டல் பொருளாதாரத்தில் முதலீடு செய்ததன் மூலம் அதிகரித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் வர்த்தக மற்றும் மேம்பாட்டுக் கருத்தரங்கின் படி, உலக அளவில் FDIயின் மிகப்பெரிய பெறுநர் நாடாக சீனாவானது அமெரிக்காவை முந்தியுள்ளது.
2020 ஆம் ஆண்டில் FDIயின் அதிகரிப்பைக் கண்ட இரு நாடுகள் இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் மட்டுமே.
ஐக்கிய இராஜ்ஜியம் மற்றும் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள் உள்ளிட்ட இதர உலக நாடுகள் மிகப்பெரிய சரிவைக் கண்டுள்ளன.