TNPSC Thervupettagam

அந்நிய முதலீடு

November 11 , 2017 2599 days 1164 0
  • இந்தியாவில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் எளிதாக முதலீடு செய்வதற்காக மத்திய ரிசர்வ் வங்கியானது அந்நிய செலாவணி மேலாண்மை (இந்தியாவிற்கு வெளியே வாழும் நபர்களினால் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு பத்திரங்கள் வழங்கல் அல்லது பரிமாற்றம்) ஒழுங்குமுறைகளை எளிமைப்படுத்தியுள்ளது.
  • 93 திருத்தங்களை ஒரே அறிவிப்பின் கீழ் கொண்டுவந்து இந்த எளிமைப்படுத்துதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • இந்த புதிய ஒற்றை அறிக்கையானது அந்நிய முதலீடு மீதான இரு ஒழுங்குறைகளைக் கொண்டது.
  • அவற்றில் ஒன்றாவான - FEMA 20, FEMA 24
  • FEMA 20 என்பது இந்திய கம்பெனிகள் அல்லது கூட்டு நிறுவனங்கள், அல்லது வரையறுக்கப்பட்ட பொறுப்புடைய கூட்டு நிறுவனங்களால் (limited liability partnership) மேற்கொள்ளப்படும் முதலீடுகள்.
  • FEMA 24 என்பது கூட்டு நிறுவனங்களில் மேற்கொள்ளப்படும் முதலீடு.
  • தாமதிக்கப்பட்ட கட்டண சமர்ப்பிப்பு அறிமுகம் இத்திருத்தங்களின் மற்றொரு முக்கியமான மாற்றம் ஆகும். இதன் மூலம் அறிவிக்கப்படாத முதலீடுகளால் உண்டாகும் சட்ட மீறுதல்களை கட்டணம் செலுத்தி முதலீட்டாளர்களால்  ஒழுங்குமுறைப்படுத்த  இயலும்.
  • அந்நிய செலாவணி மேலாண்மை சட்டமானது 1999-ல் (FEMA Act – Foreign enchange Management Act 1999) இயற்றப்பட்டது. இதுவரை 93 முறை திருத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்