இந்தியாவில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் எளிதாக முதலீடு செய்வதற்காக மத்திய ரிசர்வ் வங்கியானது அந்நிய செலாவணி மேலாண்மை (இந்தியாவிற்கு வெளியே வாழும் நபர்களினால் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு பத்திரங்கள் வழங்கல் அல்லது பரிமாற்றம்) ஒழுங்குமுறைகளை எளிமைப்படுத்தியுள்ளது.
93 திருத்தங்களை ஒரே அறிவிப்பின் கீழ் கொண்டுவந்து இந்த எளிமைப்படுத்துதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த புதிய ஒற்றை அறிக்கையானது அந்நிய முதலீடு மீதான இரு ஒழுங்குறைகளைக் கொண்டது.
அவற்றில் ஒன்றாவான - FEMA 20, FEMA 24
FEMA 20 என்பது இந்திய கம்பெனிகள் அல்லது கூட்டு நிறுவனங்கள், அல்லது வரையறுக்கப்பட்ட பொறுப்புடைய கூட்டு நிறுவனங்களால் (limited liability partnership) மேற்கொள்ளப்படும் முதலீடுகள்.
FEMA 24 என்பது கூட்டு நிறுவனங்களில் மேற்கொள்ளப்படும் முதலீடு.
தாமதிக்கப்பட்ட கட்டண சமர்ப்பிப்பு அறிமுகம் இத்திருத்தங்களின் மற்றொரு முக்கியமான மாற்றம் ஆகும். இதன் மூலம் அறிவிக்கப்படாத முதலீடுகளால் உண்டாகும் சட்ட மீறுதல்களை கட்டணம் செலுத்தி முதலீட்டாளர்களால் ஒழுங்குமுறைப்படுத்த இயலும்.
அந்நிய செலாவணி மேலாண்மை சட்டமானது 1999-ல் (FEMA Act – Foreign enchange Management Act 1999) இயற்றப்பட்டது. இதுவரை 93 முறை திருத்தப்பட்டுள்ளது.