இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் ஆனது அந்நிய முதலீட்டை அதிகரிப்பதற்காக 15 பேர் கொண்ட குழு ஒன்றினை அமைத்துள்ளது.
இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தினால் அமைக்கப்பட்ட ஆலோசனைக் குழுவானது, ‘அந்நிய முதலீட்டை ஈர்ப்பதற்கான ஆலோசனைக் குழு’ என்று அழைக்கப்படுகிறது.
முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் K.V.சுப்பிரமணியன் இந்தக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போதுள்ளச் செயல்முறைகளை மதிப்பாய்வு செய்வதன் மூலம் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியச் சந்தைகளில் முதலீடு செய்வதற்கான சில வழிகளை எளிதாக்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
உள்நாட்டுப் பத்திரச் சந்தைகளில் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்கேற்பை அதிகரிக்க இந்தக் குழு உதவும்.
முதலீட்டை ஈர்ப்பதற்கும் வெளிப்படைத் தன்மையை அதிகரிப்பதற்கும் தற்போதுள்ள விதிகளில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கான புதிய வழிமுறைகளை இக்குழுப் பரிந்துரை செய்யும்.
பாதுகாப்பு அதிகாரிகள் தொடர்பான பிரச்சினைகள் குறித்தப் பரிந்துரைகளையும் இக்குழு வழங்கும்.