TNPSC Thervupettagam
May 28 , 2020 1646 days 726 0
  • ராஜஸ்தான், ஹரியானா, உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசத்தில் உள்ள பல மாவட்டங்கள் உள்பட வட இந்தியாவின் பல பகுதிகள் கடுமையான அனல் காற்றினை எதிர்கொள்கின்றன. இங்கு 45o செல்ஷியஸிற்கும் மேல் வெப்பநிலை அல்லது வழக்கமான வெப்பநிலையை விட 5o செல்ஷியஸ் அதிகமான வெப்பநிலை நிலவுகின்றது. 
  • அனல் காற்று என்பது கோடைக் காலத்தின் போது நிகழும் வழக்கமான மிக அதிகமான வெப்பநிலையை விட அதிக வெப்பநிலை கொண்ட ஒரு காலமாகும்.
  • இந்திய வானிலை ஆய்வு மையமானது அனல் காற்றிற்காகப் பின்வரும் தகுதிநிலைகளை வழங்கியுள்ளது.
  • ஒரு பகுதியின் மிக அதிகபட்ச வெப்பநிலைச் சமவெளிகளுக்கு 40o செல்ஷியஸ் என்ற அளவிலும் மலைப் பகுதிகளில் 30o செல்ஷியஸ் என்ற அளவிலும் செல்லும் வரை அது அனல் காற்றாகக் கருதப்பட மாட்டாது.
  • வழக்கமான மிக அதிகமான வெப்பநிலை 45o செல்ஷியஸ் ஆக உள்ள போது அல்லது வழக்கமான மிக அதிக வெப்பநிலைக்கு மாறாக வெப்பநிலை உயரும் போது, அது அனல் காற்றாக அறிவிக்கப் படுகின்றது. 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்