அக்டோபர் 17 ஆம் தேதியில் இரண்டாவது தேசிய ஆயுர்வேத தினத்தன்று டெல்லியில் உள்ள சரிதா விஹார் பகுதியில் அனைத்திந்திய ஆயுர்வேத நிறுவனத்தை (All India Institute for Ayurvedha) இந்திய பிரதமர் தொடங்கி வைத்தார்.
அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகங்களின் வரிசையைப் போலவே நாட்டின் முதல் ஆயுர்வேத நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. நவீனகாலத்தின் நோய்கண்டறிதல் கருவிகள் மற்றும் தொழில்நுட்பங்களுக்கும், பாரம்பரிய ஆயுர்வேத மெய்யறிவுக்கும் இடையே ஒன்றிணைவை ஏற்படுத்தும் பொருட்டு மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் ஆயுர்வேதத்திற்கான உச்ச அமைப்பாக இந்நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டிலிருந்து மத்திய ஆயுஷ் அமைச்சகத்தால் ஆண்டுதோறும் தன்வந்திரி ஜெயந்தி அன்று தேசிய ஆயுர்வேத தினம் கொண்டாட முடிவு செய்யப்பட்டது.