மலேசிய அமைச்சரவையானது அனைத்து குற்றங்களுக்கும் மரண தண்டனையை ரத்து செய்ய ஒப்புதல் அளித்து நிலுவையில் உள்ள மரண தண்டனைகளையும் நிறுத்தி வைத்துள்ளது.
இந்த முடிவானது காலனித்துவ நடைமுறைகளுக்கு எதிராக வலுவான உள்நாட்டு எதிர்ப்பாலும் உலகின் மற்ற பகுதிகளில் மரண தண்டனையை ஒழித்த நாடுகளைப் பின்பற்றியும் எடுக்கப்பட்டுள்ளது.
கொலை, கடத்தல், துப்பாக்கிகளை வைத்திருத்தல், தேசத் துரோகம் மற்றும் போதைப் பொருள்கள் கடத்தல் ஆகியவற்றிற்காக மலேசியாவில் தற்பொழுது மரணதண்டனை விதிக்கப்பட்டு வருகிறது.
தற்போது 103 நாடுகளில் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது.