TNPSC Thervupettagam

அனைத்து மகளிர் படைப்பிரிவு அணிவகுப்பு

January 30 , 2024 172 days 213 0
  • ஆயுதப் படைகள், எல்லைப் பாதுகாப்புப் படை, டெல்லி காவல் துறை மற்றும் அக்னி வீரர்கள் ஆகியப் படைப் பிரிவுகளைச் சேர்ந்த மகளிர் டெல்லியின் கர்தவ்யா வழித் தடத்தில் அணிவகுப்பினை நடத்தினர்.
  • துணைப் படைத்தலைவர் ஆஷு யாதவ், விமானப்படைத் தலைவர் ஷ்ரிஷ்டி வர்மா மற்றும் தலைவர் சரண்யா ராவ் ஆகியோருடன் இணைந்து கேப்டன் சந்தியா மஹ்லா முப்படைகளின் அனைத்து மகளிர் படைப்பிரிவின் அணிவகுப்பினை வழிநடத்திச் சென்றார்.
  • இந்தப் படைப்பிரிவு ஆனது, மூன்று படைப்பிரிவுகளையும் சேர்ந்த மகளிர் அக்னி வீரர்களைக் கொண்ட குழுவாகும்.
  • முதன்முறையாக, மேஜர் சிருஷ்டி குல்லர் தலைமையில், ஆயுதப்படை மருத்துவப் பணியைச் சேர்ந்த அனைத்து மகளிர் குழு கர்தவ்யா வழித்தடத்தில் அணிவகுப்பினை மேற்கொண்டது.
  • இருபது ஆண்டுகளுக்குப் பிறகு அணிவகுப்பினை மேற்கொண்ட 149 பேர் கொண்ட பாம்பே சப்பர்ஸ் குழுவின் அணிவகுப்பினை பெண் அதிகாரி மேஜர் திவ்யா தியாகி வழிநடத்திச் சென்றார்.
  • டெல்லி காவல் படையின் வரலாற்றில் முதல்முறையாக இந்தியக் காவல் பணி அதிகாரி ஸ்வேதா K. சுகதன் அவர்கள், மகளிர் பணியாளர்களை மட்டும் உள்ளடக்கிய படையின் அணிவகுப்பினை வழிநடத்திச் சென்றார்.
  • இந்திய விமானப்படையின் (IAF) அணிவகுப்பினைப் படைத் தலைவர் ரஷ்மி தாக்கூர் வழிநடத்திச் சென்றார்.
  • இந்தியக் கடலோர காவல்படையின் அணி வகுப்பினை துணைப் படைத்தளபதி செளநதி ஷர்மா வழிநடத்திச் சென்றார்.
  • இரண்டாவது முறையாக, அலங்கரிக்கப்பட்ட ஒட்டகங்களில் மகளிர் ஒட்டகச் சவாரி குழுவினர் இந்த அணி வகுப்பில் பங்கேற்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்