TNPSC Thervupettagam
November 13 , 2017 2597 days 956 0
  • உலகம் முழுவதும் தனிச்சிறப்பு வாய்ந்த செயல்கள் மேற்கொண்டதனை அங்கீகரிக்கும் வகையில், அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையத்திற்கு (United Nations High Commissioner for Refugees -UNHCR) 2017-ஆம் ஆண்டின் சமூக நீதிக்கான அன்னை தெரசா நினைவுப் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
  • 2016 செப்டம்பரில் புனிதராக அறிவிக்கப்பட்ட அன்னை தெரசாவின் நினைவாக ஹார்மோனி பவுண்டேஷன் எனும் அமைப்பால்  2005-ஆம் ஆண்டு சமூக நீதிக்கான அன்னை தெரசா நினைவுப் பரிசு தோற்றுவிக்கப்பட்டது.
  • ஹார்மோனி பவுண்டேஷனின் 2017ஆம் ஆண்டிற்கான கருத்துரு “எல்லைகளைத் தாண்டிய பரிவு”(Compassion Beyond Borders).
  • UNCHR-ன் செயல் முயற்சிகள் இந்த கருத்துருக்களுக்கு பொருந்துவதாக உள்ளது.
  • UNHCR அமைப்பானது ஐ.நா.அகதிகள் நிறுவனம் எனவும் அழைக்கப்படும்.
  • உலகம் முழுவதும் நாடில்லாமல் தவிக்கும் மக்களுக்கும் (Stateless Peoples), உள்நாட்டு சண்டைகளால் நாட்டினுள்ளே இடம் பெயர்ந்த எண்ணிலடங்கா மக்களுக்கும் மனிதாபிமான உதவிகள் புரியும் ஐ.நா.வின் கீழுள்ள ஓர் அமைப்பே  UNHCR ஆகும்.
  • இதன் தலைமையகம் – ஜெனிவா, சுவிட்சர்லாந்து
  • இது ஐக்கிய நாடுகள் மேம்பாட்டு குழுவின் (United Nations Development Group) உறுப்பினராகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்