பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பானது (DRDO - Defence Research and Development Organisation)பாலசோரில் (ஒடிசா) அபயாஸ் – HEAT வகை விமானத்தை வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளது.
HEAT என்ற சொற்றொடரானது அதிவேக விரிவாக்கமடையும் வான்வழி இலக்கு (High-speed Expendable Aerial Target) என்பதைக் குறிக்கின்றது.
இது DRDOன் வான்வெளித் தொலை அளவு வளர்ச்சி அமைப்பினால் வடிவமைக்கப் பட்டு, தயாரிக்கப்பட்டுள்ளது.
சிறப்பம்சங்கள்
இது பல்வேறு ஏவுகணை அமைப்புகளுக்கு இலக்காகப் பயன்படுத்தப்படும் ஒரு ஆளில்லா குட்டி விமானமாகும்.
இது ஒரு சிறிய வாயு டர்பைன் என்ஜினால் செயல்படுத்தப்பட உள்ளது.
இது நுண் – மின்பொறிமுறை அமைப்புகளால் மேற்கொள்ளப்படும் கண்காணிப்புஅடிப்படையிலான ஒரு கண்காணிப்பு அமைப்பாகும்.
இது குறைந்த அளவு மின்சாரத்தை உட்கொள்ளும் மற்றும் குறைந்த செலவு கொண்ட இலகுரக, நம்பகத் தக்க சாதனமாகும்.
இது முழுவதும் தானியங்கும் வகை விமானமாக நிரலாக்கப் பட்டுள்ளது.