TNPSC Thervupettagam

அபராஜிதா மசோதா - மேற்கு வங்காளம்

September 7 , 2024 77 days 126 0
  • மேற்கு வங்காள சட்டசபையானது, ‘2024 ஆம் ஆண்டு அபராஜிதா பெண் மற்றும் குழந்தை மசோதாவினை (மேற்கு வங்காள குற்றவியல் சட்டங்கள் மற்றும் திருத்தம்)’ நிறைவேற்றியுள்ளது.
  • கற்பழிப்பு மற்றும் கொலைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்குவதற்கான விதிகள் இதில் அடங்கும்.
  • இந்த மசோதாவானது கீழ்க்காணும் விதிகளின் கீழ் இந்தக் குற்றங்கள் தொடர்புடைய விதிகளில் திருத்தங்களை மேற்கொள்ள உள்ளது.
    • பாரதிய நியாய சன்ஹிதா 2023,
    • பாரதிய நாக்ரிக் சுரக்சா சன்ஹிதா 2023, மற்றும்
    • பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் 2012 (POCSO)
  • இப்புதிய சட்டத்தின் கீழ், பாலியல் வன்கொடுமைக்கான தண்டனை 7 ஆண்டுகளுக்கு மேலானதாக இருக்கும் என்பதோடு அது அபராதத்துடன் 10 ஆண்டுகள் வரையிலும் நீட்டிக்கப் படலாம்.
  • பாதிக்கப்பட்டக் குழந்தையிடம் இருந்து 7 நாட்களுக்குள் ஆதாரம் பதிவு செய்யப்பட வேண்டும் என்று இந்தப் புதிய மசோதா கட்டாயமாக்குகிறது.
  • இதற்கானச் சிறப்பு நீதிமன்றம் ஆனது இந்த விசாரணையை 30 நாட்களுக்குள் முடிக்க வேண்டும்.
  • கடுமையான பலவந்தமான பாலியல் வன்கொடுமைக்கான தண்டனை என்பது கடுங் காவல் ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் அல்லது மரண தண்டனையாகும். 

​​​​​​​                                                                                                                                                                                                                                                                

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்