ரிசர்வ் வங்கியானது அபாய நேர்வு அடிப்படையிலான ஓர் உள் தணிக்கை முறையை (risk-based internal audit system) அறிமுகப் படுத்தியுள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்ட சில வங்கி சாரா நிதி நிறுவனங்கள் மற்றும் நகர்ப்புறக் கூட்டுறவு வங்கிகளுக்கு இது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதன் விதிமுறைகளின்படி, 5,000 கோடி ரூபாய் மதிப்பு சொத்து கொண்டுள்ள, வைப்புத் தொகையைப் பெறும் அனைத்து வங்கி சாரா நிதி நிறுவனங்களும் இந்த முறையைச் செயல்படுத்த வேண்டும்.
இந்த முறை 2022 ஆம் ஆண்டின் மார்ச் 31 ஆம் தேதிக்குள் செயல்படுத்தப்பட வேண்டும்.