அப்துல் கலாமின் பிறந்த நாள் / உலக மாணவர்கள் தினம் - அக்டோபர் 15
October 16 , 2019 1869 days 875 0
உலக மாணவர்கள் தினமானது இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரான டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் பிறந்த தினமான அக்டோபர் 15 அன்று ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப் படுகின்றது.
டாக்டர் கலாம் ஒரு அர்ப்பணிப்பு மிக்க ஆசிரியராக இருந்ததாலும் வேறு எதற்கும் முன்பாக ஆசிரியர் பணியில் தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டதாலும் அவரது பிறந்த நாளில் இத்தினமானது அனுசரிக்கப் படுகின்றது.
2010 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது அக்டோபர் 15 ஆம் தேதியை உலக மாணவர்கள் தினமாக அறிவித்தது.
இஸ்ரோ மற்றும் டிஆர்டிஓவுடன் இணைந்து பணியாற்றியதற்காக 1981 ஆம் ஆண்டில் பத்ம பூஷண் என்ற விருதும் 1990 ஆம் ஆண்டில் பத்ம விபூஷண் என்ற விருதும் இந்திய அரசாங்கத்தினால் இவருக்கு வழங்கப்பட்டது.
1997 ஆம் ஆண்டில், இந்தியாவின் பாதுகாப்புத் தொழில் நுட்பத்தின் நவீனமயமாக்கல் மற்றும் அறிவியல் ஆராய்ச்சி ஆகியவற்றிற்கு இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக 'பாரத் ரத்னா' என்ற விருது வழங்கி இவர் கௌரவிக்கப்பட்டார்.