TNPSC Thervupettagam

அப்பலோ 8-ன் 50-வது ஆண்டு விழா

January 6 , 2019 2023 days 599 0
  • சந்திரனுக்கான நாசாவின் முதலாவது விண்கலமான அப்பல்லோ 8 ஆனது 2018 டிசம்பர் 21 அன்று தனது 50ஆம் ஆண்டினை நிறைவு செய்தது.
  • 1968 டிசம்பர் 21 அன்று தொடங்கப்பட்ட இது அமெரிக்காவின் அப்பலோ விண்வெளித் திட்டத்தின் 2வது மனித விண்வெளிப் பயணத் திட்டமாகும்.
  • மனிதரை சுமந்து கொண்டு குறைமட்ட புவிப்பாதையை விட்டுச் சென்று சந்திரனை அடைந்து பின் அதனையும் சுற்றிவிட்டுப் பாதுகாப்புடன் திரும்பிய முதல் விண்கலம் இதுவாகும்.
  • பிராங்க் போர்மன், ஜேம்ஸ் லோவெல் மற்றும் ஆண்டர்ஸ் ஆகிய மூன்று வீரர்களும் குறைமட்ட புவிப்பாதைக்கு அப்பால் பயணம் செய்து பூமியை முழுக் கோளாக கண்டுவிட்டு பின் மற்றொரு விண்வெளிப் பொருளின் ஈர்ப்பு விசைக்குள் சென்ற முதல் மனிதர்களாக ஆனார்கள்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்